ஆறு வீரர்களுடன் மாயமான சிறிலங்கா கடற்படை படகு! தேடுதல் பணி தீவிரம்
சந்தேகத்திற்குரிய படகுகளை சோதனையிடுவதற்காக தென் பகுதி கடற்பரப்பில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஆறு கடற்படையினரும் அவர்கள் சென்ற படகும் காணாமல் போயுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
20 நாட்களுக்கு மேலாக அவர்கள் காணாமல் போயிருப்பதாகவும் அவர்களுடனான தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கடந்த 16 ஆம் திகதி ஆறு பேர் கொண்ட இந்த கடற்படை அணி இந்த நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக சென்றுள்ளதுடன் 17 ஆம் திகதியில் இருந்து அவர்களுடான தொடர்புகள் துண்டிக்கப்பட்டள்ளதாகவும் அவர்களை இதுவரை தொடர்புக்கொள்ள முடியவில்லை எனவும் கடற்படையினர் கூறியுள்ளனர்.
தேடுதல் பணி
தென் பிராந்திய கடற்படை கட்டளை தலைமையகத்தின் கீழ் கடமையாற்றிய கடற்படையினரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
கடற்படையினர் இதுவரை அவர்கள் சென்ற கடற்பரப்பில் தேடுதலில் ஈடுபட்ட போதிலும் அவர்களையும் அவர்கள் சென்ற படகையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
கருத்துக்களேதுமில்லை