வெலிபென்ன பரிமாற்றத்தில் வெள்ளம்; வாகன போக்குவரத்துக்கு தடையா!!..
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் (E-01) வெலிபென்ன பரிமாற்றத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அதன் வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை பொலிஸார் தெரிவித்தனர்.
வெள்ளப்பெருக்கு காரணமாக அந்த வழியாக இலகு ரக வாகனங்கள் வெளியேறுவதும், உள்ளே செல்வதும் தடைபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாற்றுப்பாதை 4 அடி வெள்ள நீரில் ஓரளவு மூழ்கியுள்ளது.
இதேவேளை, மழையுடன் கூடிய காலநிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் வாகனங்களை குறைந்த வேகத்தில் செலுத்துமாறு பொலிஸார் வாகன சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை