மஹிந்த -சீனத்தூதுவர் சந்திப்பு
இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வெள்ளிக்கிழமையன்று மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். அங்கு இருவரும் இலங்கைக்கும் சீன மக்கள் குடியரசுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பலதரப்பட்ட விடயங்கள் குறித்துக் கலந்துரையாடினர்.
கலந்துரையாடலின் போது, சீனாவின் சோஷலிசக் கட்டமைப்பில் புதிய மைல்கல்லாக அமையவுள்ள சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்வரும் 20ஆவது தேசிய மாநாட்டுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து, முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ, ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிடம் வாழ்த்துக் கடிதத்தை கையளித்தார்.
கருத்துக்களேதுமில்லை