எதிரெதிர் துருவங்களாகவிருக்கும் வடக்கு அரசியல் தலைவர்கள் ஒரே புள்ளியில் சந்தித்த தருணம்!
சிறிலங்கா நாடாளுமன்றின் முன்னாள் சபாநாயகர் கருஜெயசூரிய தலைமையில் யாழில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.
இந்த கலந்துரையாடல் இன்றைய தினம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பல முக்கிய அரசியல் தலைவர்களும் பங்கேற்றிருந்தனர்.
முக்கியமாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோர் ஒரே மேசையில் அமர்ந்திருந்தனர்.
எதிரெதிர் அரசியல் தரப்பினர் ஒன்றாக
இந்நிலையில் வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் எதிரெதிர் அரசியல் தரப்பினர் ஒன்றாக இணைந்திருந்ததை போல தமிழ் மக்களின் அரசியல் தீர்விற்கும் ஒன்றாக பயணிக்க வேண்டும் எனவும் பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை