22 ஆம் திருத்தத்துக்கு நிபந்தனைகளுடன் ஆதரவளிக்க எதிரணி தீர்மானம்

22 ஆம் திருத்தத்துக்கு நிபந்தனைகளுடன் ஆதரவளிக்க பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் கூட்டணி தீர்மானித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் கூட்டணி தலைமைக்குழு கூட்டம் இன்று இடம்பெற்றபோது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக மனோ கணேசன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் உறுப்புரிமை

22 ஆம் திருத்தத்துக்கு நிபந்தனைகளுடன் ஆதரவளிக்க எதிரணி தீர்மானம் | Support 22Nd Amendment With Conditions Sjb

 

இரட்டைக் குடியுரிமை கொண்டோர் நாடாளுமன்றத்தில் உறுப்புரிமை வகிக்க முடியாது எனவும் சமர்பிக்கப்பட்டுள்ள வரைபில் உள்ளதை மாற்றி, அமெரிக்க பிரஜை பசில் ராஜபக்சவின் எண்ணப்படி செயற்பட சிறிலங்கா பொதுஜன முன்னணிக்கு ஒருபோதும் இடம் தரப்போவதில்லையென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பசில் ராஜபக்ச அமெரிக்க காங்கிரஸில் இடம்தேடி கொள்ளட்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை அடுத்த வருட முதல் காலாண்டில் கலைப்பதற்கு தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அதிகாரம் வழங்கும், “இரண்டரை வருடம்”, என்ற விதி மாற்றப்படக்கூடாதென குறிப்பிட்டுள்ள மனோ கணேசன், இலங்கை மக்கள் தற்போதைய நாடாளுமன்றத்தை கலைத்து, புதிய நாடாளுமன்றத்தை அமைப்பதற்கே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

தந்திரோபாய நோக்கில் ஆதரவு

22 ஆம் திருத்தத்துக்கு நிபந்தனைகளுடன் ஆதரவளிக்க எதிரணி தீர்மானம் | Support 22Nd Amendment With Conditions Sjb

 

ஆகவே, இரண்டரை வருடத்தில் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் அதிபரிடம் தொடர்ந்து வழங்கப்படுவதை தாம் தந்திரோபாய நோக்கில் ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடளுமன்றத்தில் குறைந்தபட்சம் 113 உறுப்பினர்கள் கூடி நாடாளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தலுக்கு செல்ல வேண்டும் என தீர்மானித்தால், அதை அதிபர் ரணில் விக்ரமசிங்க மறுக்க முடியாது எனவும் அதனை அவர் ஏற்று நாடாளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தலுக்கு செல்ல தீர்மானிக்க வேண்டும் என தாம் நம்புவதாகவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

எனவே, அடுத்த வருடம் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுமெனவும், தேர்தலை சந்திக்க தமிழ் முற்போக்கு கூட்டணி தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.