கொடிகாமத்தில் இன்று இரவு வயோதிபரை மோதி தள்ளியது ரயில்..

யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயில்

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிர வண்டியுடன் மோதி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – கண்டி வீதி, கொடிகாமத்தை சேர்ந்த சி. சுந்தரம் (வயது 67) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கொடிகாமத்தில் இன்று இரவு வயோதிபரை மோதி தள்ளியது ரயில் | Train Hit An Elderly Person In Jaffna

 

கொடிகாமம் தெற்கில் இன்றைய தினம் சனிக்கிழமை இரவு 8 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதேவேளை கடந்த ஒரு வாரத்திற்கு முன்னரும் யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் அதிகாலை 4.30 மணியளவில் தொடருந்துடன் மோதுண்டதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார்.

கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த தபால் தொடருந்துடன் மோதுண்டதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.