ஆயுதப்போராட்டம் வெடிக்கும் -அரசுக்கு பொன்சேகா கடும் எச்சரிக்கை
மக்கள் ஆயுதம் ஏந்த வாய்ப்பு
அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்து வரும் அடக்குமுறையை எதிர்கொண்டுள்ள மக்கள் போராட்டம் ஆயுதம் ஏந்த வாய்ப்புள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எச்சரித்துள்ளார்.
இணையத்தளமொன்றுக்கு அவர் அளித்த செவ்வியின்போதே இதனைத் தெரிவித்துள்ளார்.அதில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
முறையான தலைமை இல்லை
முறையான தலைமை இல்லாத காரணத்தினால் கடந்த முறை இடம்பெற்ற போராட்டத்தை அரசினால் அடக்க முடிந்ததாகவும், இம்முறை அப்படி நடக்காமல் இருக்க தனது நேரத்தையும், உழைப்பையும், செல்வத்தையும் செலவழித்து போராட்டத்திற்கான அடித்தளத்தை தயார் செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மிகவும் அநியாயமாக மக்களை இலக்கு வைத்து அரசாங்கத்தின் அடக்குமுறை நடைமுறைப்படுத்தப்படுமாயின் அதனை எதிர்கொள்ள ஆயுதம் ஏந்தியவாறு போராட்டம் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை