இலங்கையின் வருமானம் குறித்து சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
இலங்கையின் வருமானம் குறித்து சர்வதேச நாணய நிதியம் முக்கிய தகவலொன்றை வெளியிட்டுள்ளது.
ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியத்தின் பொருளாதார கண்ணோட்டம் தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் ஊடகவியலாளர் மாநாடு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் எனே மாரி குல்ட் இலங்கையின் வருமானம் குறித்து தகவல் வெளியிட்டுள்ளார்.
நடுத்தர வருமானம்
இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வீழ்ச்சி காணப்பட்டாலும் நடுத்தர வருமானம் கொண்ட நாடாகவே உள்ளது என்று எனே மாரி குல்ட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“கடந்த சில மாதங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள போதிலும், இலங்கை ஒரு நடுத்தர வருமானம் கொண்ட நாடாகவே உள்ளது.
கருத்துக்களேதுமில்லை