மீண்டும் அதிகரிக்கப்பட்ட மின் வெட்டு நேரம்..! வெளியாகிய அறிவித்தல்
மின்வெட்டு
இன்று (17) திங்கடகிழமைக்கான மின்வெட்டு நேர விபரங்களை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
விபரங்களின் படி, குறித்த நாட்களில் 2 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
2 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு
2 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதிக்குள் இரண்டு கட்டங்களாக முதலில் 1 மணித்தியாலமும் பின்பு 1 மணித்தியாலம் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
கருத்துக்களேதுமில்லை