சேவா இண்டர்நேஷனல் பவுண்டேஷன் மூலமாக கணவனையிழந்த மற்றும் கைவிடப்பட்ட பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொருட்கள் வழங்கல்…

சேவா இண்டர்நேஷனல் பவுண்டேஷன் மூலமாக இலங்கையின் பொருளாதார சூழலினால் கடும் பாதிப்பிற்குள்ளான கணவனையிழந்த மற்றும் கைவிடப்பட்ட பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன. இலங்கை முழுவதிலிமிருந்து 200 பிரதேசங்களிலிருந்து 10000 குடும்பங்களுக்கு ஒன்றறை மாத உணவுத் தேவைக்கான ரூபாய் 16000/- (பதினாராயிரம்) மதிப்பிலான 25 கிலோ அரிசி மற்றும் 25 கிலோ மாவு ஆகியன வழங்கும் இத்திட்டத்தின்கீழ் நுவரெலியா மாவட்டத்தைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் 16-10-2022 அன்று பொருட்கள் கையளிக்கப்பட்டன.
மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வில் வாகரை, வாழைச்சேனை, கிரான், செங்கலடி, ஆரையம்பதி, கன்னங்குடா, களுதாவளை, கொக்கட்டிச்சோலை, பழுகாமம், புதூர், புளியந்தீவு, கோட்டைமுனை, ஊரணி, திராய்மடு, மாமாங்கம், கல்லடி, நாவற்குடா ஆகிய பகுதிகளை சார்ந்த குடும்பங்களுக்கு 26 கிலோ அரிசி மற்றும் 25 கிலோ மாவு ஆகியன வழங்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.