யாழ்ப்பாணத்தில் சீன சிலிப்பர் செல்கள்..! இந்தியாவுக்கு புதிய அச்சுறுத்தல்

இலங்கையின் வடக்கே யாழ் குடா நாட்டில் சீனா அதியுயர் தொழில்நுட்ப பொறிமுறைகளை பயன்படுத்தி உளவு வேலைகளில் ஈடுபட்டு வருவதால் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதான ஒரு செய்தியை தமிழக உளவுத்துறை விடுத்திருக்கிறது.

சாதாரணமான எச்சரிக்கையாக இந்த புலனாய்வு தகவல் வந்திருக்கிறது.

சீன சிலிப்பர் செல்கள்

 

முல்லைத்தீவு, அனலை தீவு, மீசாலை, சாவகச்சேரி உட்பட்ட பகுதிகளில் சீன முகங்களின் நடமாட்டங்கள் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள தமிழக உளவுத்துறை, சீனா தனக்கான சில பணிகளைச் செய்ய உள்ளூரில் சில முகவர்களை திரட்டி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

வடக்கில் தமிழர்களிடமிருந்து சீனா தனக்குரிய சிலிப்பர் செல்களை திரட்டிக்கொள்வதான தொனியில் தமிழகத்தின் எச்சரிக்கை வந்துள்ளது.

இதனால் சீன முகங்கள் மட்டும் இந்திய எல்லைக்குள் ஊடுருவிக் கொள்வார்கள் என்பது அல்ல, அவர்கள் தமக்குரிய பணியை முன்னெடுக்க வடக்கில் திரட்டிய சிலிப்பர் செல்களையும் இந்தப் பணியில் ஈடுபடுத்தலாம் என்ற தகவலை தமிழக உளவுத்துறை வெளியிட்டுள்ளது.

இதனால் தமிழகத்தின் கடலோர பாதுகாப்பும், கடலோர கடலோரத்தை மையப்படுத்தி உளவுத்துறையும் வலுப்படுத்தப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்குள் ரகசிய நுழைவு

 

இலங்கையை தளமாகக் கொண்ட அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களின் உதவியுடன் சில சீன முகவர்கள் கடல் வழியாக இந்தியாவுக்குள் ரகசியமாக நுழைந்ததாக தகவல் கசிந்த நிலையில், இந்த புதிய எச்சரிக்கை நேற்று பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே வடக்கில் உள்ள கடலட்டைப் பண்ணைகளில் சீனா சில அதியுயர் தொழில்நுட்ப பொறிமுறைகளைப் பயன்படுத்தி உழவு வேலைகளில் ஈடுபடுவதான செய்திகள் வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக இருக்கக்கூடிய இந்தோ – சீனப் போட்டிக்கு மத்தியில் இலங்கையில் விழுந்து கிடக்கும் பொருளாதாரத்தை தூக்கி நிமிர்த்துவதற்கான நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சீனாவின் வலிமை

 

இதேவேளை, சீன கொம்யூனிஸ்ட் கட்சிக்காக சீன அதிபர் வழங்கிய உரையில் இந்து சமுத்திரப் பிராந்தியம் உட்பட்ட உலக அரங்கில் வளர்ந்து வரும் சீனாவின் வலிமை மற்றும் செல்வாக்கு எடுத்துக்காட்டப்பட்டிருந்தது.

இதே சமகாலத்தில் இலங்கைத் தீவையும் உள்ளடக்கிய தெற்காசிய பிராந்தியத்துக்குரிய வொஷிங்டன் நிகழ்ச்சி நிரல்களை கையாளும் முக்கிய இராஜதந்திரியான டொனால்ட் லூ எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு செல்லவுள்ளார்.

இந்த நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்தி வருகிறது இன்றைய செய்திவீச்சு,

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்