டொலருக்காக இலங்கையில் நீக்கப்படவுள்ள முக்கிய கட்டுப்பாடு
இலங்கையின் அந்நிய செலவாணியை அதிகரிக்க நடைமுறையிலுள்ள கொவிட் கட்டுப்பாடுளை தளர்த்துமாறு ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் கொரோனா பரிசோதனைக்கான அறிக்கையை கட்டாயப்படுத்தி விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்குமாறு அவர் கோரியுள்ளார்.
அந்நிய செலாவணி
சுற்றுலா மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளில் இலங்கை வேறு நாடுகளுடன் போட்டியிட முடியாது. ஆகையினால் எமது நாட்டிற்கு அந்நிய செலாவணியை பெற்றுக்கொள்ள நாங்கள் நெகிழ்வு போக்கினை கடைபிடிக்க வேண்டும் என உதயங்க வலியுறுத்தியுள்ளார்.
12 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் 72 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைக்கான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும், அல்லது 48 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட RAT பரிசோனை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என சுகாதார அமைச்சு கட்டுப்பாடுகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்தின் நிலைப்பாடு
இந்நிலையில் இந்தக் கோரி்க்கை தொடர்பில் அரசாங்கம் சாதமான நிலைப்பாட்டில் பரிசீலித்து வருவதாக தெரிவி்க்கப்படுகிறது.
கருத்துக்களேதுமில்லை