சீரற்ற காலநிலை: நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை…

நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவியுடன் ஒருங்கிணைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.

நிதி அமைச்சின் ஊடாக தேவையான அனைத்து ஏற்பாடுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் வழங்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களின் சுகாதார வசதிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிவாரணத் திட்டத்தில் அரச அதிகாரிகள் மற்றும் முப்படையினரின் ஆதரவைப் பெறுவதற்கு அனைத்து பிரதேச செயலாளர்கள் மற்றும் அமைச்சுக்களின் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயற்படுமாறு ஜனாதிபதி மாவட்ட செயலாளர்களுக்கு மேலும் பணிப்புரை விடுத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.