அடிப்படை உரிமையை மீறிய பாடசாலை துணை அதிபர்! தண்டித்த உயர் நீதிமன்றம்

அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறி மாத்தளையில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் கடுமையான தடியடி நடத்தி காயம் ஏற்படுத்திய இரண்டு பாடசாலை மாணவர்களுக்கு அரச பாடசாலை ஒன்றின் துணை அதிபரும் மற்றும் அரசும் 200,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

பாடசாலை துணை அதிபர் ஒழுக்காற்று அதிகாரியாக தனது அதிகாரங்களை மீறியுள்ளார் என்றும், அரசியலமைப்பின் 11 ஆவது பிரிவை மீறும் வகையில் இரண்டு மாணவர்களையும் கொடூரமாக, மனிதாபிமானமற்ற மற்றும் இழிவான நடத்தை அல்லது தண்டனைக்கு உட்படுத்தியுள்ளார் என்று உயர் நீதிமன்றம் தமது தீர்ப்பின்போது கூறியுள்ளது.

 

மாத்தளை மாவட்டத்தில் உள்ள பிரபல பாடசாலையின் மாணவர்களான இரண்டு மனுதாரர்கள், 2012 ஆம் ஆண்டு துணை அதிபர் தமக்கு வழங்கிய சித்திரவதை, கொடூரமான, மனிதாபிமானமற்ற மற்றும் இழிவான தண்டனை அல்லது நடத்தப்பட்டதை எதிர்த்து இந்த அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

 

அடிப்படை உரிமையை மீறிய பாடசாலை துணை அதிபர்! தண்டித்த உயர் நீதிமன்றம் | Principal Who Violated Fundamental Rights

 

பாடசாலை சொத்துக்களுக்கு சேதம்

பாடசாலை சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை காரணமாக ஒழுக்க அடிப்படையிலேயே தாம் தண்டனை வழங்கியதாக பாடசாலை துணை அதிபர் மன்றில் தெரிவித்தார்.

 

அடிப்படை உரிமையை மீறிய பாடசாலை துணை அதிபர்! தண்டித்த உயர் நீதிமன்றம் | Principal Who Violated Fundamental Rights

 

இதனை தவிர, மனுதாரர்களை கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற நடத்தை அல்லது தண்டனைக்கு உட்படுத்தும் எண்ணம் தமக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

எனினும் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட மருத்துவ சான்றுகள் மனுதாரர்கள் மீதான தாக்குதல்கள், இழிவானது மற்றும் மனுதாரர்களின் உடல் மற்றும் மன நலனில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

 

இதனையடுத்து பாடசாலை துணை அதிபர், அடிப்படை உரிமைகளை மீறிய குற்றத்திற்காக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.