ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் இடம்பெற்ற தேசிய வாசிப்பு மாத விழிப்புணர்வு ஊர்வலம்…
தேசிய வாசிப்பு மாதம் ஓக்டோபர் 2022 “அறிவார்ந்த சமூகத்திற்கான வாசிப்பு” எனும் தொணிப்பொருளின் கீழ் கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் 18/10/2022 இன்று காலை 08.00 மணியளவில் பாடசாலை அதிபர் ஜே.ஆர்.டேவிட் அமுர்தலிங்கம் அவர்களின் தலமையில் பாடசாலை நூலக பொறுப்பாளர்களான S. A.C.M. றமின்,திரு.சி.சிறிக்காந்தன், திருமதி.கோ.கிரியாழினி ஆகியோரின் ஏற்பாட்டிலும் பாடசாலை பிரதி அதிபர்களின் வழிகாட்டலினால் நூலகத்தில் இருந்து மாணவர்கள் வாசிப்பு வாசகங்களை ஏந்தியவாறு பாடசாலையை அன்மித்த பாதையின் ஊடாக அக்கரைப்பற்று பிரதேச வாழ் மக்களுக்கு வாசிப்பின் முக்கியத்துவத்தினை உணர்த்தும் வண்ணம் விழிப்புணர்வு ஊர்வலம் இடம்பெற்றது.
இதில் நூற்றுக்கானக்கான மாணவ,மாணவிகள், ஆசிரியர்கள் என பலரும் பங்குபற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை