தென் பகுதி கடற்பரப்பில் கடற்படை வீரர்களுடன் மாயமான படகு – தற்போது வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு!..
தென் பகுதி கடற்பரப்பில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் 6 பேர் கடந்த செப்டம்பர் மாதம் நடுப் பகுதியில் இருந்து தொடர்பு துண்டிகன்கப்பட்டு மாயமாகியிருந்தனர்.
இவ்வாறான நிலையில், 6 பேருடன் காணாமல் போன கடற்படை படகு மீண்டும் தொடர்பாடலை ஏற்படுத்தியுள்ளதாக சிறிலங்கா கடற்படை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சந்தேகத்திற்கிடமான படகுகளை சோதனையிடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஆறு பேருடனான குறித்த கடற்படை படகுடனான தொடர்பு கடந்த சுமார் ஒரு மாதங்களாக துண்டிக்கப்பட்டிருந்தது.
ஆறு பேரைக் கொண்ட இந்தக் கடற்படைக் குழுவினர் கடந்த செப்டெம்பர் 16ஆம் திகதி தென் கடற்பரப்புக்குச் சென்றிருந்த நிலையில், 17ஆம் திகதி அவர்களின் தொடர்பாடல் துண்டிக்கப்பட்டமையினால் அவர்கள் காணாமல் போனதாக கடற்படை அறிவித்தது.
மீண்டும் ஏற்பட்ட தொடர்பு
காணாமல் போன கடற்படையினர் தெற்கு கடற்படை கட்டளை பிரிவைச் சேர்ந்தவர்கள் என கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடற்படையினர் இதுவரை கடற்பகுதியில் தேடுதல் நடத்திய போதிலும், இந்தக் குழுவோ அல்லது படகோ கடந்த நாட்களில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை.
இந்த நிலையில், மீண்டும் குறித்த படகுடன் இன்று மீண்டும் தொடர்பாடலை ஏற்படுத்தியுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவித்துள்ளன.
கருத்துக்களேதுமில்லை