துபாயில் பாலியல் தொழிலுக்கு விற்கப்படும் பெண்கள்!!

சட்டவிரோதமாக பெண்களை துபாய் நாட்டுக்கு அனுப்பி வைக்கும் வர்த்தகம் கொழும்பு ஆமர் வீதியில் பிரதேசத்தில் இடம்பெற்று வருவது தெரியவந்துள்ளது.

 

 

ஆமர் வீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த மோசடியில் சிக்கி, துபாய் சென்று, அங்கு விபத்துக்கு உள்ளாகி அங்கவீனமுற்ற நிலையில் நாடு திரும்பிய பெண்ணொருவர் வழங்கிய தகவல்களை அடுத்து இது தெரியவந்துள்ளது.

ஆமர் வீதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான பெண்ணொருவரே இந்த சம்பவத்தை எதிர்நோக்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான தான் சகல தரப்பினருக்கும் அறிவித்துள்ள போதிலும் இதுவைரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என அந்த பெண் குற்றம் சுமத்தியுள்ளார்.

துபாயில் பாலியல் தொழிலுக்கு விற்கப்படும் பெண்கள்

துபாயில் விற்கப்படும் இலங்கை பெண்கள்! பெண்ணொருவர் வழங்கிய பரபரப்பு தகவல் | Sri Lankan Women Being Sold For Sex Work In Dubai

 

இலங்கை பெண்களை சுற்றுலா விசாவில் துபாய் நாட்டுக்கு அனுப்பி வைத்து, அவர்களை அங்கு பாலியல் தொழிலுக்கு விற்பனை செய்வதாகவும் அந்த பெண் கூறியுள்ளார். இறுதியில் மோசடியாளர்களிடம் இருந்து தப்பிக்க மேற்கொண்ட முயற்சியின் போது தான் ஒரு காலை இழக்க நேரிட்டது எனவும் அந்த பெண் மேலும் தெரிவித்துள்ளார்.

துபாய் உட்பட மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுலா விசாவில் பெண்களை அனுப்பி வைத்து அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் நடவடிக்கைகள் தொடர்பாக ஏற்கனவே சமூக வவைத்தள ஊடங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.

துபாய்-Dubai

 

இலங்கையில் உள்ள முகவர்கள் மற்றும் துபாய் போன்ற நாடுகளில் உள்ள முகவர்களால் இலங்கை பெண்கள் இவ்வாறு பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுவதாகவும் அவற்றில் கூறப்பட்டிருந்தன.

மேலும் சுற்றுலா விசாவில் துபாய் நாட்டுக்கு சென்ற பல பெண்கள் அங்கு அனாதரவான நிலைமையில் இருப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.