இலங்கையில் மூன்று வைத்தியசாலைகளில் 24 மணிநேரத்தில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சை (படங்கள்)
கொழும்பு, ராகம மற்றும் பேராதனை வைத்தியசாலைகளில் 24 மணித்தியாலங்களில் 3 வெற்றிகரமான கல்லீரல் சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாக பேராதனை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அர்ஜுன திலகரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு பயிற்சி பெற்ற நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலானோர் பங்களித்ததாகவும், கல்லீரல் மாற்று அறுவை சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதற்கு இவர்களின் பங்களிப்பே காரணம் என்றும் டொக்டர் அர்ஜுன திலகரத்ன தெரிவித்தார்.
24 மணிநேரத்தில் வெற்றிகர சத்திரசிகிச்சைகள்
பேராதனை வைத்தியசாலையில் 6 மாதங்களில் வெற்றிகரமாக சுமார் 5 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கு கல்லீரல் சத்திரசிகிச்சைக்கு விசேட உபகரணங்கள் தேவைப்படுவதாகவும், பேராதனை வைத்தியசாலையில் தேவையான சகல உபகரணங்களும், நிபுணத்துவ வைத்தியர் குழுவும் உள்ளதாகவும் வைத்தியர் அர்ஜுன திலகரத்ன தெரிவித்தார்.
வெளிநாடுகளில் மேற்கொண்டால்
இந்த கல்லீரல் மாற்று சத்திரசிகிச்சைகளை வெளிநாடு ஒன்றில் செய்தால் 30 அல்லது 40 மில்லியன் ரூபா செலவாகும் எனவும் இந்த சத்திரசிகிச்சைகளை இந்நாட்டில் செய்தாலும் அரசாங்கம் பெருமளவு பணம் செலவழிக்க நேரிடும் எனவும் அர்ஜுன திலகரத்ன தெரிவித்தார்.
நன்றி – படங்கள் -‘அட’
கருத்துக்களேதுமில்லை