ஊடக உரிமங்களை ஒழுங்குபடுத்துவதற்கு நடவடிக்கை – ஊடக அமைச்சு

இலத்திரனியல் ஊடக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அனுமதிப்பத்திரங்களை முறைப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக ஊடக அமைச்சின் செயலாளர் ஒன்றுகூடல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தற்போது வழங்கப்பட்டுள்ள உரிமங்கள் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை என்றும், அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் உரிமங்களை ஒழுங்குபடுத்துவதற்கும், ஒன்றுக்கொன்று ஒத்த பொதுவான உரிமத்தை வழங்குவதற்கும் அமைச்சு அனுமதி பெற்றுள்ளதாகவும் செயலாளர் தெரிவித்தார்.

2023 முதல் உரிமம் வைத்திருப்பவர்களிடமிருந்து உரிமக் கட்டணமும் பெறப்படும். எவ்வாறாயினும், தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக 2025 ஆம் ஆண்டு முதல் அதிக கட்டணம் அறவிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.