இந்திய துணைத் தூதுவரின் நெடுந்தீவு விஜயம் – சீன ஆக்கிரமிப்பைக் கண்காணிக்கும் பின்புலமா…
யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் யாழ்ப்பாண மாவட்டத்தின் நெடுந்தீவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
நேற்றைய தினம் இந்த உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
இதன் போது கல்வி, பொது உள்கட்டமைப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான வளர்ச்சிப் பிரச்சினைகள் குறித்து நெடுந்தீவு பிரதேச செயலர், அரச அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
நெடுந்தீவுக்கு விஜயம்
நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இந்திய துணைத் தூதுவர், இந்திய புலமைப்பரிசில் தொடர்பில் விளக்கமளித்ததோடு அங்கு மாணவர்களுக்கு பணப்பரிசுகளையும் வழங்கிவைத்தார்.
இதேவேளை யாழ்ப்பாண தீவகப்பகுதிகளில் சீனாவின் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளமை தொடர்பாக பேசப்படும் நிலையில் இந்தியத் துணைத்தூதரின் நெடுந்தீவு விஜயம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை