காலியில் துப்பாக்கிச் சூடு: குழந்தை உட்பட மூவருக்குக் காயம்

காலி, யக்கலமுல்ல, மாகெதர பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் ஒரு குழந்தையும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

காயமடைந்தவர்கள் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.