யாழ். மந்திரிமனையின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்
வரலாற்றுப் பழமை வாய்ந்த மரபுரிமைச் சின்னங்களில் ஒன்றான மந்திரிமனை நீண்ட கால பராமரிப்பற்ற நிலையில் சிதைவடைந்த நிலையில் காணப்படுகின்றது.
யாழ்ப்பாணம் மரபுரிமை மையமும் தொல்லியல் திணைக்களமும் இணைந்து இதன் புனரமைப்பு பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் முதற்கட்டமாக இன்றைய தினம் கட்டடத்தில் வளர்ந்து காணப்படும் மரங்களை அழிக்கும் நோக்கில் அவற்றிற்கான இரசாயன செயற்பாடு தொல்லியல் திணைக்களத்தின் தலைமை அலுவலக இராசயன பிரிவினருடன் இணைந்த வகையில் வேலைத்திட்டம் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
இந்த செயற்பாடுகளில் இரசாயனப் பிரிவு உத்தியோகத்தர்கள் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட உதவிப் பணிப்பாளர் யு.ஏ.பந்துலஜீவ தலைமையிலான அணியினர் பங்குபற்றி வருகின்றனர்.
இவ் வேலைத்திட்டத்திற்குப் பொறுப்பாளியாக வி.மணிமாறன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை