சட்டக்கல்லூரி நுழைவுத் தேர்வு தாய்மொழியிலேயே நடத்தப்படும் – நீதியமைச்சர்
சட்டக்கல்லூரி நுழைவுத் தேர்வு தாய்மொழியிலேயே நடத்தப்படும் என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
சட்டக்கல்லூரியில் எந்த மொழியில் கற்கைகள் நடத்தப்படும் என்பது தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த நீதியமைச்சர், சட்டக்கல்லூரி நுழைவுத் தேர்வை தாய்மொழியில் நடத்தலாம் என சட்டக் கல்வி ஆணைக்குழு தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.
எனினும் கற்கை நடவடிக்கைகள் ஆங்கிலத்தில்தான் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை