இந்தாண்டு விவசாயிகளுக்கு சிறந்த யூரியா உரம் வழங்கப்பட்டது -மஹிந்த அமரவீர

கடந்தாண்டு சிறு போகத்தில் நெற் செய்கைக்கு அரசாங்கம் வழங்கிய யூரியா உரம் 15 வருடங்களு பின்னர் சிறந்த முறையில் வழங்கப்பட்டதாக விவசாயிகள் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

பெரும் போகத்திற்கு உரங்களை அரசாங்கம் வழங்குவது தொடர்பில் விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே விவசாய பிரதிநிதிகள் குழுவொன்று இந்த கருத்துக்களை வெளியிட்டது.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. பெரும் போகத்தில் இரசாயன உரம் வழங்கப்படுவது குறித்து விவசாயி பிரதிநிதிகள் அமைச்சரிடம் கேட்டறிந்தனர்.

இவ்வருடம் நெல் மற்றும் சோளத்திற்கு யூரியா வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், முதல் சுற்றுக்கான உரங்கள் ஏற்கனவே அனைத்து கமநல சேவை நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தின் கடனுதவியின் கீழ் நாட்டுக்கு வழங்கிய 65,000 மெட்ரிக் தொன் யூரியாவில் மேலும் 34,000 மெட்ரிக் தொன் யூரியா மீதம் உள்ளதாகவும், அவை பெரும் போகத்தில் முதல் சுற்று நெற் செய்கைக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

15 வருடங்களின் பின்னர் அரசாங்கம் வழங்கிய சிறந்த யூரியா என விவசாய பிரதிநிதிகள் தெரிவித்தனர். அந்த உரம் போட்டதால் நெல் அறுவடை அதிகரித்ததாகவும், யார் என்ன சொன்னாலும் பொருட்படுத்தாமல் நெல் அறுவடை எதிர்பார்த்த அளவை விட அதிகரித்துள்ளது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த பெரும் போகத்திற்கும் உயர்தர உரம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.