அரசாங்கத்தின் கடன் வரம்பு மேலும்.663 பில்லியன் ரூபாவால் அதிகரிப்பு
இந்தாண்டு, அரசாங்கத்தின் கடன் வரம்பை மேலும் 663 பில்லியன் ரூபாவால் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டில் அரசாங்கம் பெறக்கூடிய அதிகபட்ச கடன் தொகையாக 3,844 பில்லியன் ரூபாவை பாராளுமன்றம் அங்கீகரித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கருத்துக்களேதுமில்லை