காலி முகத்திடல் போராட்டம்: பொலிஸார் சிறுவரை கையாண்டமை தொடர்பில் விசாரணை
கடந்த ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தின் போது, பொலிஸார் சிறுவரை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பொலிஸ் மற்றும் குறித்த சிறுவனின் பெற்றோருக்கு எதிராக பல தரப்பினர் முறைப்பாடு செய்துள்ளதாக அதன் தலைவர் உதய குமார அமரசேன குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, பொலிஸாருக்கு எதிராக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவத்தின் போது அங்கிருந்த உத்தியோகத்தர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் கோட்டை பொலிஸாரிடம் மேலதிக விளக்கத்தை கோரியுள்ளதாகவும் தலைவர் குறிப்பிட்டார்.
கருத்துக்களேதுமில்லை