இலங்கை எரிபொருள் வழங்குநர்களுக்கு 751 மில்லியன் டொலர் கடன்பட்டுள்ளது – காஞ்சன

இலங்கை மத்திய வங்கியின் வரலாற்றில் மிக மோசமான நாணய நெருக்கடியுடன் நாடு போராடி வரும் நிலையில், இலங்கை ஏற்கனவே செய்த கொள்வனவுகளுக்காக வெளிநாட்டு எரிபொருள் வழங்குநர்களுக்கு செலுத்த வேண்டிய 751 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிலுவைத் தொகையாக உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இலங்கையின் அரச நிறுவனமான இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கடனில் எரிபொருள் பெற்று பின்னர் கட்டணம் செலுத்துகிறது. Vitol, PetroChina, Coral Energy, BB Energy, Swiss Singapore, Litasco மற்றும் OQ ட்ரேடிங் ஆகிய நிறுவனங்களுக்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கடனை செலுத்த வேண்டியுள்ளது.

அத்துடன், அரச வங்கிகளுக்கு சுமார் 2.0 பில்லியன் அமெரிக்க டொலர் கடன்களை செலுத்த வேண்டியுள்ளது.

கடந்த டிசம்பரில் இருந்து பெற்ற 700 மில்லியன் டெலர் கடன் எல்லை வசதிகளை தீர்ப்பனவுசெய்ய இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் திறைசேறிக்கு 252 பில்லியன் ரூபாவை செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.