உள்ளுராட்சி மன்ற தேர்தலை உரிய திகதியில் நடத்துமாறு கோரிக்கை

உரிய தினத்தில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் சந்தித்து இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் கடந்த 20 ஆம் திகதி முதல் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு எவ்வித நகர்வுகளையும் முன்னெடுக்கவில்லை.

ஆனால் தற்போது உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை 8 ஆயிரத்திலிருந்து 4 ஆயிரமாக குறைப்பதற்கு அறிவிப்பொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

தேர்தலை உரிய திகதியில் நடத்தாமல் ஒத்திவைப்பதே இதன்நோக்கமாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.

அத்துடன் எந்வொரு தேர்தலையும் எதிர்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி தயார் நிலையில் உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.