சிறை அறைகள் பெண்களுக்கென தனியாக அமைக்கப்பட வேண்டும் -தலதா அத்துக்கோரள எம்.பி.
பெண்களுக்கென தனியான சிறை அறைகள் அமைக்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட உறுப்பினர் சட்டத்தரணி தலதா அத்துக்கோரள இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சிறைகளில் பெண் கைதிகள் தனித்தனியாக தங்க வைக்கப்பட்டிருந்தாலும், பெண்களுக்கு தனி இடங்களை ஒதுக்குவது முக்கியம் என்றும் அவர் கூறினார்.
ஐந்து நீதிச் சட்டமூலங்கள் மீதான விவாதத்தின் போதே திருமதி அத்துக்கோரள இவ்வாறு தெரிவித்தார்.
சிறைச்சாலைகளுக்கான மருத்துவ சபைகளை நியமிக்கும் போது சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்தின் தலையீட்டுடன் செயற்பாடுகள் இடம்பெறுவது முக்கியமானது எனவும் திருமதி அத்துக்கோரள குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை