இறைச்சி, மீன் உண்பதை 50 சதவீத மக்கள் கைவிட்டுள்ளனர்…
இறைச்சி, மீன் உண்பதை 50 சதவீத மக்கள் கைவிட்டுள்ளனர்…
இறைச்சி, மீன் உண்பதை 50 சதவீத இலங்கையர்கள் கைவிட்டுள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பொருட்களின் விலையேற்றத்தின் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது.
இதில் பெருந்தோட்ட துறையினர் முழுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதுடன், கடற்றொழில் சமூகமும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சுதந்திரத்தின் பின்னர் பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில், நோயாளர்களும் குறைந்தளவிலான மருந்துகளையே பயன்படுத்தி வருகின்றமையும் செஞ்சிலுவை சங்கத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை