கெர்சன் நிலைமை மிகவும் கடினமானது என்கின்றார் ரஷ்யப் படை தளபதி

கெர்சன் பிராந்தியத்தில் நிலைமை மிகவும் கடினமாக மாறியுள்ளது என உக்ரைனில் உள்ள ரஷ்யப் படைகளின் தளபதி கூறியுள்ளார்.

உக்ரேனியப் படைகள் நாட்டின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளைத் திரும்பப் பெறுவதற்கான தாக்குதலை முன்னெடுத்துச் செல்கின்றது.

இந்நிலையில் அந்த பகுதியை தம்மோடு இணைத்த சில வாரங்களுக்குப் பின்னர், அங்கிருந்து பொது மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது.

கெர்சனில் உள்ள ரஷ்ய இராணுவம் எல்லாவற்றிற்கும் மேலாக மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதை உறுதி செய்யும் என்றும் ரஷ்ய படை தளபதி கூறியுள்ளார்.

மேலும் ரஷ்ய துருப்புக்களின் நிலைகளைத் தாக்கும் முயற்சிகளை எதிரிகள் இன்னும் கைவிடவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.