தமிழர் பகுதியில் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் பெண் உட்பட பலர் கைது!

நம் சமுதாய ஆரோக்கியத்திற்கு எதிராக பாரிய அளவில் எழுந்திருக்கும் பிரச்சினைகளில் முக்கியமானது போதைப்பொருட்களால் எழும் பிரச்சினைகளாகும்.

 

போதைப் பொருட்களினால் தனிமனிதன், குடும்பம், சமுதாயம் என எல்லா அமைப்புகளிலும் பாதிப்புகளே ஏற்படுகின்றன.

 

இந்நிலையில தற்போது நாட்டில் பல பகுதிகளில் போதைப் பொருள் பாவனை அதிகரித்து வருகின்றது.

 

இதனை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் பல்வேறு சுற்றிவளைப்புகளையும் கைது நடவடிக்கைகளையும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.

 

மன்னார்

மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளுடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

சுமார் இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான ‘கொக்கைன்’ போதைப்பொருளுடன் மன்னாரை சேர்ந்த நபர் உள்ளடங்களாக 6 சந்தேக நபர்களை மன்னார் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

 

மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் புத்தளம் நுரைச்சோலை பகுதிக்கு கடந்த திங்கட்கிழமை (17.10.2022)தேடுதல் நடவடிக்கைக்காக சென்றிருந்த மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கைன் போதைப் பொருளை மீட்டுள்ளனர்.

 

தமிழர் பகுதியில் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் பெண் உட்பட பலர் கைது |

 

1 கிலோ 26 கிராம் கொக்கைன் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் புத்தளம் மற்றும் கல்பிட்டியினை சேர்ந்த 25, 26, 34, 36, 53 வயதுடைய 5 சந்தேகநபர்களையும் கைது செய்தனர்.

 

அவர்களிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணையில் நானாட்டான பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அருகண்குண்டு பகுதியினைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரின் வீட்டில் இருந்து கொக்கைன் வகை போதைப்பொருள் 506 கிராம் கைப்பற்றப்பட்டுள்ளது.

 

தமிழர் பகுதியில் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் பெண் உட்பட பலர் கைது | Sri Lanka Police Investigation Drug Addiction

 

மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் துல்சான் நாகாவத்தவின் பணிப்பில், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பிரபாத் விதானகே, மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொ.ப.ரத்னாயக தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்படி கொக்கைன் போதைப் பொருளினை கைப்பற்றியும், அதனை உடைமையில் வைத்திருந்த சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர்.

 

மேலதிக விசாரணையில் நானாட்டான் அருகண்குண்டு பகுதியினை சேர்ந்த 48 வயதுடைய சந்தேகநபரினை 506 கிராம் கொக்கைன் போதைப் பொருளுடன் கைப்பற்றி இன்றைய தினம்(19)மன்னார் மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

 

தமிழர் பகுதியில் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் பெண் உட்பட பலர் கைது | Sri Lanka Police Investigation Drug Addiction

 

 

யாழ்ப்பாணம்

20 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

செல்வபுரத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவரே கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது நண்பர்களிடமிருந்தே தனக்கு போதைப்பொருள் கிடைப்பதாகவும் அதேபோல் தனது கிராமத்திலும் இலகுவாக போதைப் பொருளை பெற்றுக்கொள்ள முடிவதாகவும் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக போதைப் பொருள் தான் பாவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

கைது செய்யப்பட்ட நபர் விசாரணைகளின் பின் நாளைய தினம் நீதி மன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்

 

யாழ். காங்கேசன்துறை

யாழ். காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் உயிர் கொல்லி ஹெரோயின் போதைப் பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

சந்தேகநபர்கள் மூவரும் மல்லாகம் சந்திப்பகுதியில் இன்று (19.10.2022) கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

பிரதான பொலிஸ் பரிசோதகர் மதுரங்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் இவர்கள் மூவரையும் கைது செய்துள்ளனர்.

 

கைது செய்யப்பட்டவர்கள் 32 மற்றும் 23, 25 வயது உடைய நபர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து 50 மில்லி கிராம் 60 மில்லி கிராம் 65 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

 

இவர்கள் யாழ்ப்பாண நல்லூர் மற்றும் கொக்குவில் – குளப்பிட்டி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை நாளை யாழ். நீதிவான் நீதிமன்றில் முற்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

மேலதிக சட்ட நடவடிக்கைக்காக இவர்கள் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்

 

கோப்பாய்

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அச்செழு பகுதியில் உயிர் கொல்லி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

 

யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்திய விசேட குற்றத் தடுப்பு பொலிஸார் விசேட ரோந்து நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

உப பொலிஸ் பரிசோதகர் தெய்வநாயகம் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் பெண்ணை கைது செய்துள்ளனர்.

 

இதன்போது குறித்த பெண்ணிடமிருந்து 200 மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டது.

 

கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய குடும்ப தலைவி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

  • கைது செய்யப்பட்ட பெண்ணை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்