விசாரணையின் போது சாட்சியமளித்த சட்டத்தரணி

போராட்டங்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை பொலிஸார் தற்போது, போராட்டத்தின் அமைதியான நினைவேந்தல்களில் பங்கேற்பவர்கள் மீதும் தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளனர் என மனித உரிமை ஆணைக்குழு நடத்திய விசாரணையில் சாட்சியமளித்த சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 9ம் திகதி காலி முகத்திடலில் இடம்பெற்ற அமைதியான நினைவேந்தல் மீது பொலிஸார் நடத்திய தாக்குதலுக்கு எதிராக இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தரிந்து ஜயவர்தன செய்த முறைப்பாடு தொடர்பாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் ஆரம்பிக்கப்பட்ட விசாரணையின்போது இந்த கருத்து கூறப்படுள்ளது.

 

கடந்த செவ்வாய்கிழமை ஆணைக்குழுவின் விசாரணைக்கு முன்பாக சாட்சியமளித்த சட்டத்தரணி ஜயந்த தெஹியத்தகே, கடந்த ஒக்டோபர் மாதம் 9ம் திகதி சட்ட விதிகளின் அடிப்படையில் இல்லாமல் பொலிஸார் பல தன்னிச்சையான கைதுகளை மேற்கொண்டதாகவும், இதனால் அமைதியான நினைவேந்தலில் பங்குபற்றியவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கலவரத்தை தொடங்கியதற்கான ஆதாரம் உள்ளது

 

அரச அடக்குமுறை மற்றும் ராஜபக்ச ஆட்சிக்கு எதிராக இலங்கையில் நடந்த அமைதிப் போராட்டத்தின் போது கொல்லப்பட்டவர்களை போராட்ட ஆர்வலர்கள் ஒவ்வொரு மாதமும் 9ம் திகதி நினைவு கூறுகின்றனர்.

இந்தநிலையில் ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன, தமது சாட்சியத்தில், ஒக்டோபர் 9 ஆம் திகதி பண்டாரநாயக்க சிலைக்கு அருகில் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்தியதாக தெரிவித்தார்.

விசாரணையின் போது சாட்சியமளித்த சட்டத்தரணி | Counsel Who Testified At The Trial

 

அவர்கள் வீதியைக் கடந்து காலி முகத்திடலை நோக்கிச் சென்றபோது பொலிஸார் மீண்டும் அவர்களை இடையூறு செய்ததாக கூறினார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் கொண்டு வந்த மெழுகுவர்த்திகளையும் பொலிஸார் வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்றுள்ளதுடன், குழந்தைகளை சுமந்து சென்றவர்களையும் துன்புறுத்தியதாகவும் ஜயவர்தன கூறினார்.

பொலிஸார் எப்படி கலவரத்தை தொடங்கினர் மற்றும் அது ஒரு பெரிய சம்பவமாக மாறும் வரை அதை வழிநடத்தியது எவ்வாறு என்பதற்கான வீடியோ ஆதாரம் தங்களிடம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.