போதைப்பொருள் விற்பனையில் 23 வயதுடைய குடும்ப தலைவி!

கோப்பாய் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட அச்செழு பொய்ட்டி பகுதியில் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

குறித்த பெண்ணை நேற்று (19) கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் காவல்துறை பிராந்திய விசேட குற்றத் தடுப்பு பிரிவினரின் விசேட ரோந்து நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

உப காவல்துறை பரிசோதகர் தெய்வநாயகம் மேனன் தலைமையிலான குழுவினர் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.

 

கைது செய்யப்பட்ட குடும்ப தலைவி

போதைப்பொருள் விற்பனையில் 23 வயதுடைய குடும்ப தலைவி! | Woman Arrested With Lethal Drug

இதன்போது குறித்த பெண்ணிடமிருந்து 200 மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய குடும்ப தலைவி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண் கோப்பாய் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.