சட்டவிரோத முறையில் நாளாந்தம் ஒரு இலட்சத்து 15 ஆயிரம் லீற்றர் கள் உற்பத்தி

சட்டவிரோத மற்றும் சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் முறைமையை பயன்படுத்தி நாளாந்தம் ஒரு இலட்சத்து 15 ஆயிரம் லீற்றர் கள் உற்பத்தி செய்யப்படுவதாக நிதி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தெரியவந்துள்ளது.

நாட்டில் நாளாந்தம் 1 இலட்சத்து 60 ஆயிரம் லீற்றர் கள்ளுக்கான கேள்வி நிலவுகிறது. எனினும், 45 ஆயிரம் லீற்றர் கள்ளே உற்பத்தி செய்யப்படுகிறது. எஞ்சிய கள், சட்டவிரோத மற்றும் சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் முறைமையை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் மதுசார உற்பத்தியாளர்களினால் விற்பனையகங்கள் நடாத்திச் செல்லப்படுதல் காரணமாக அரசாங்கத்திற்கு வரி கிடைக்காது போகின்றமை குறித்து அறிக்கை ஒன்றை கையளிக்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஆலோசனை வழங்கியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.