பெரும்பான்மையான அரசியல்வாதிகள் ஊழல்வாதிகள்: அஸ்கிரிய மகாநாயக்கர்
அரசியல்வாதிகள் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் நாட்டுக்கான கடமையை புறக்கணிப்பது குறித்து அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரகாகொட ஞானரதன தேரர் கவலை தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன் நிறுவனத்தின் நிதஹஸ் சேவக சங்கமய பிரதிநிதியுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது, பெரும்பான்மையான அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் ஊழல்வாதிகள் என மகாநாயக்க தேரர் சுட்டிக்காட்டியுள்ளார். மோசமான நிர்வாகம் மற்றும் ஊழல் காரணமாக தேசிய சொத்துக்கள் மற்றும் பொது நிதிகள் ஆபத்தில் உள்ளன என்றார்.
மல்வத்த பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர்
பெரும்பான்மையான அரசியல்வாதிகள் நாட்டை அபிவிருத்தி செய்யாமல் அழிப்பதற்கு காரணமாக இருந்துள்ளனர். தேசிய சொத்துக்களை பாதுகாப்பதாக வாக்குறுதியளித்து பதவிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும் தனிப்பட்ட இலாபங்களுக்காக இதற்கு நேர்மாறான செயற்பாடுகளையே மேற்கொண்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்
கருத்துக்களேதுமில்லை