புனர்வாழ்வு பணியக சட்டமூலம் தொடர்பில் உச்ச நீதிமன்றின் முக்கிய அறிவிப்பு!

புனர்வாழ்வு சட்டமூலம் அரசியலமைப்பின் 112 (1) வது பிரிவுக்கு முற்றிலும் முரணானது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

அதிலுள்ள சில உள்ளடக்கங்கள் அரசியமைப்பின் சில சரத்துகளுக்கு முரணாக இருப்பதாலேயே அவற்றை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.

இராணுவத்தால் நடத்தப்படும் புனர்வாழ்வு நிலையம்

புனர்வாழ்வு பணியக சட்டமூலம் தொடர்பில் உச்ச நீதிமன்றின் முக்கிய அறிவிப்பு! | Sri Lanka Rehabilitation Act Supreme Court Order

 

புனர்வாழ்வு பணியக சட்டமூல வரைவு கடந்த செப்டம்பர் 23ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில், இராணுவத்தால் நடத்தப்படும் ‘புனர்வாழ்வு’ மையங்களில் மக்களை தடுத்து வைப்பதற்கு அதிகாரிகளுக்கு பரந்தளவிலான அதிகாரங்களை வழங்கும் சட்டமூல வரைவை சிறிலங்கா அரசாங்கம் மீளப் பெற வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்தது.

கட்டாயக் காவல்

புனர்வாழ்வு பணியக சட்டமூலம் தொடர்பில் உச்ச நீதிமன்றின் முக்கிய அறிவிப்பு! | Sri Lanka Rehabilitation Act Supreme Court Order

 

இந்த சட்டமூலம் புனர்வாழ்வு மையங்களில் போதைக்கு அடிமையானவர்கள், முன்னாள் போராளிகள், வன்முறை, தீவிரவாத குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் வேறு ஏதேனும் குழுவை சேர்ந்தவர்கள் வலுக் கட்டாயமாக காவலில் வைக்க அனுமதிக்கும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.