அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவருக்கு இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் வாழ்த்து

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் மூத்த அரசியல் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அரசியலில் நீண்ட அனுபவமுள்ளவராகக் கருதப்படும் மல்லிகார்ஜுன கார்கேவின் அறிவாற்றலும் அரசியல் சாதுர்யமும் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு மென்மெலும் வலுச் சேர்க்கும்.


மலையக மக்களின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பல்வேறு உதவிகள் மற்றும் திட்டங்கள் வழங்கப்பட்டது. இலங்கை தமிழ் மக்களின் மேல் என்றுமே அன்பும் பரிவும் கொண்டிருக்கும் அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே பல ஆண்டுகளாக நல்ல உறவு நீடித்து வருகிறது.

இனி வரும் காலங்களில் தற்போது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மல்லிகார்ஜுன கார்கே வின் வழிகாட்டுதலின் பேரில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி பல்வேறு சிறப்புகளைப் பெற மனதார வாழ்த்துகிறேன் என்று தான் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.