ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு பிணை
ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்தமை குறித்து கைதுசெய்யப்பட்டிருந்த மேலும் நான்கு சந்தேகநபர்கள், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வழக்கு கொழும்பு – கோட்டை நீதிவான் திலின கமகே முன்னிலையில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது.
இதன்போது, சந்தேகநபர்களை 5 இலட்சம் ரூபா மதிப்பிலான சரீரப் பிணையில் விடுவிக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
அதேநேரம், சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் முன்னேற்றத்தை, நீதிமன்றுக்கு அறிக்கையிடுமாறு, பொலிஸாருக்கு நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை