நெல் கொள்வனவிற்கான நிதி கிடைக்கவில்லை

சிறு போகத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல் இதுவரை கொள்வனவு செய்யப்படவில்லை என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

நெல் கொள்வனவிற்கான நிதியை அரச வங்கிகளிடம் கோரியுள்ள போதிலும், இதுவரை அந்த பணம் கிடைக்காமையால் நெல்லை கொள்வனவு செய்ய முடியாதுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹண புஷ்பகுமார குறிப்பிட்டார்.

வங்கிகளிடமிருந்து நிதி கிடைக்கும் காலம் இதுவரை அறிவிக்கப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.

கடனுக்கான வட்டி 28 வீதம் அறிவிடப்படும் என வங்கிகளூடாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

எனினும், வட்டி வீதம் அதிகம் என்பதால் அதனை குறைத்துக்கொள்வது தொடர்பில் வங்கிகளுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளதாக அவர் கூறினார்.

சிறு போகத்தில் ஒரு கிலோகிராம் நாட்டரிசி நெல் 120 ரூபாவிற்கும் ஒரு கிலோகிராம் சம்பா நெல் 125 ரூபாவிற்கும் ஒரு கிலோகிராம் கீரி சம்பா நெல் 130 ரூபாவிற்கும் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹண புஷ்பகுமார சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.