ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணைகளிற்கு உதவ தயாராக உள்ளதாக பிரித்தானியா தெரிவிப்பு !
ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணைகளிற்கு உதவுவதற்கு தயாராக உள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. பாதுகாப்பு விவகாரங்களிற்கான பிரித்தானிய இராஜாங்க அமைச்சர் டொம் டுஜென்ஹட் இதனை தெரிவித்துள்ளார்.
விசாரணைகளிற்கு உதவுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டால், அந்த வேண்டுகோள் பொருத்தமானதாகவும் சட்டபூர்வமானதாகவும் அவசியமானதாக காணப்பட்டால் அதனை பரிசீலிக்க தயார் என அவர் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் குறித்து உரிய விசாரணைகள் இடம்பெறாததால் இந்த விடயத்திற்கு இன்னமும் உரிய தீர்வு காணப்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை