இட்டுகம (செய்கடமை) கொவிட்-19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்தினை மூடுவதற்கு தீர்மானம் !

அமைச்சரவையின் அனுமதியைத் தொடர்ந்து, தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஸ்தாபிக்கப்பட்ட இட்டுகம (செய்கடமை) கொவிட்-19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்தின் செயல்பாடுகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

85737373 என்ற இலங்கை வங்கி கணக்கு இலக்கத்தில் இயங்கி வந்த குறித்த நிதியமானதும் 18 ஆம் திகதி முதல் மூடப்பட்டுள்ளதாக நிதியத்தின் செயலாளர் டொக்டர் தாரக லியனபத்திரன பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடவும் தடுப்பூசி செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கும், நிதியத்துக்கு பங்களித்த நன்கொடையாளர்களுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்த அவர், காசோலைகள் மற்றும் பணத்தை நிதியத்துக்கு அனுப்புவதைத் தவிர்க்குமாறும் அறிவித்தார்.

.220 கோடியே 71 இலட்சத்து 64 ஆயிரத்து 785 ரூபாய் 58 சதத்தை நிதியம் நன்கொடையாக பெற்றதுடன், 199 கோடியே 75 இலட்சத்து 69 ஆயிரத்து 456 ரூபாய் 56 சதம் செலவிடப்பட்டுள்ளது.

பிசிஆர் பரிசோதனைகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள், தடுப்பூசித் திட்டங்கள், அவசர சிகிச்சை பிரிவுகளுக்கான கட்டில்கள் மற்றும் மருந்து கொள்வனவுக்கு மேற்குறிப்பிட்ட பணம் செலவிடப்பட்டுள்ளது.

மேலும், ஒக்டோபர் 18ஆம் திகதியன்று குறித்த நிதியில் 21 கோடியே 8 இலட்சத்து 77 ஆயிரத்து 431 ரூபாய் 05 சதம் மீதி காணப்படுவதுடன், சத்திரசிகிச்சை மற்றும் மருத்துவ உதவிக்கான ஜனாதிபதி நிதியத்தில் அந்தப் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது என, அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.