பல்லேகம சிறினிவாச நாயக்க தேரரின் இறுதிக் கிரியைகள் தொடர்பான அறிவிப்பு

கடந்த செவ்வாய்கிழமை காலமான அதி வணக்கத்திற்குரிய கலாநிதி பல்லேகம சிறினிவாச நாயக்க தேரரின் இறுதிக் கிரியைகள் அனுராதபுரத்தில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது.

ஜய ஸ்ரீ மஹா போதி வளாகத்தில் உள்ள சந்தாகார மண்டபத்தில் பிற்பகல் 2.30 மணியளவில் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன, மேலும் தகனம் துபாராமய ஸ்தூபிக்கு அருகிலுள்ள புராதன மகா விகாரையின் மைதானத்தில் நடைபெறும்.

ருவன்வெலிசேய விகாரையின் பிரதமகுரு அதி வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரத்தன தேரர் தலைமையிலான மகா விகாரை மகா சங்கத்தினர் பூதவுடல் தகன இடத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு முன்னர் சமய சடங்குகளை நடாத்தவுள்ளனர்.

அநுராதபுரம் மாவட்ட செயலாளர் ஜானக ஜயசூரியவின் ஒருங்கிணைப்புடன் புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் வடமத்திய மாகாண ஆளுநர் மஹீபால ஹேரத் ஆகியோர் அனுராதபுரத்திற்கு வருகை தந்துள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று அனுராதபுரத்திற்கு வருகை தரவுள்ளதாக அனுராதபுரம் மாவட்ட செயலாளர் ஜானக ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெறும் இறுதிச் சடங்குகளில் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் பாரா மன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக ஆகியோர் அரசாங்கத்தையும் எதிர்க்கட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.