இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, கடன் வழங்குநர்கள் உதவுவார்கள் – சேமசிங்க
சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வங்கி (WB) மற்றும் இலங்கையின் கடன் வழங்குநர்கள் இலங்கையை ஸ்திரப்படுத்துவதற்கு இலங்கையின் பொருளாதாரத்திற்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஒக்டோபர் 10 முதல் 16 வரை வொஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கிக் குழுவின் வருடாந்தக் கூட்டங்கள் மற்றும் விசேட குழுக் கூட்டங்கள் என்பன தொடர்பில் அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர்களுடன் இருதரப்பு சந்திப்புகள் இடம்பெற்றதாகவும், உலக வங்கியின் நிர்வாகப் பணிப்பாளர், தெற்காசிய பிராந்தியத்திற்கான உலக வங்கியின் உப தலைவர், சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் பிராந்திய உப தலைவர் மற்றும் உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்திச் சங்கக் குழு உள்ளிட்ட உலக வங்கி அதிகாரிகளும் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தியதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் சவால்களை ஏற்படுத்திய நெருக்கடிகளின் தாக்கம் இந்த வருட வருடாந்த கூட்டங்களில் வலியுறுத்தப்பட்ட முக்கிய விடயங்களில் ஒன்று என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை