இவ்வாண்டு முதல் 8 மாதங்களில் ஆடை ஏற்றுமதி 20.8% வளர்ச்சிப் பதிவு

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022 ஜனவரி முதல் ஒகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி 20.8 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி, 2022 ஆம் ஆண்டு ஜனவரி – ஒகஸ்ட் மாதங்களில் ஆடை ஏற்றுமதி 3,773.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது, முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 3,122.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்துள்ளது.

இதே காலகட்டத்தில் வருடாந்த புடவை ஏற்றுமதி 5.9 சதவீதம் அதிகரித்து 240.9 மில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் ‘வெளிப்புறத் துறை செயற்திறன் – ஒகஸ்ட் 2022’ அறிக்கையின்படி,ஒகஸ்ட் மாதத்தில், ஆடை மற்றும் புடவை வருடாந்த ஏற்றுமதியானது 14.9 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

இதேவேளை ஆடை ஏற்றுமதி 19.8 சதவீதம் அதிகரித்து 526.7 மில்லியன் டொலராகவும், புடவை ஏற்றுமதி 26.7 சதவீதம் குறைந்து 31.7 மில்லியன் டொலராகவும் உள்ளது.

இதர புடவை பொருட்களின் ஏற்றுமதி 18.7 சதவீதம் குறைந்து 8.5 மில்லியன் டொலராக இருந்தது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.