ஓயாமடுவ மருந்து உற்பத்தி வலயத்தின் பணிகள் பெப்ரவரியில் ஆரம்பிக்கப்படும் -சுகாதார அமைச்சர்
அரச மற்றும் தனியார் துறைகளை இணைத்து இலங்கையில் ஸ்தாபிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள முதலாவது மருந்து உற்பத்தி வலயமான ஓயாமடுவ மருந்து உற்பத்தி வலயத்தின் நிர்மாணப் பணிகள் பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தலைமையில் சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இது தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் அமைச்சு, அரச மருந்துக் கூட்டுத்தாபனம், தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம், மருத்துவ விநியோகப் பிரிவு அதிகாரிகள் மற்றும் முதலீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
சம்பந்தப்பட்ட முதலீட்டு வலயத்திலுள்ள 22 காணிகளில் 11 காணிகள் ஏற்கனவே முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
சர்வதேச தரத்திற்கமைவாக நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய அனைத்து வகை மருந்துகளையும் உற்பத்தி செய்து மக்களுக்கு குறைந்த விலையில் உயர்தர மருந்துகளை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும் என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டிற்குத் தேவையானவை மருந்துகளில் தற்போது 20% உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுவதுடன், அடுத்த இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குள் இலக்கு மட்டத்தை 50% ஆக உயர்த்த நம்பிக்கை உள்ளது” எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த கைத்தொழில் வலயத்தின் ஊடாக பல்வேறு வகையான மருந்துகள் மற்றும் பல சத்திரசிகிச்சை கருவிகள் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனுராதபுரம் “தெயத கிருள” இருந்த நிலம் இந்த திட்டத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. வனஜீவராசிகள் திணைக்களம் இப்பகுதிக்கு யானை வேலி அமைப்பதற்கான தொழில்நுட்ப ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாக சுகாதார அமைச்சுக்கு அறிவித்ததன் மூலம் தற்போதுள்ள பல பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும், பிரதேசத்தின் காணி, நீர் மற்றும் மின்சாரப் பிரச்சினைகள் தொடர்பிலும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுடன் கலந்துரையாடப்பட்டது.
இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மருந்துகளில் சிலவற்றை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற பல திட்டங்களை நாட்டில் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா மற்றும் உத்தேச மருந்து உற்பத்தி வலயத்தின் பிராந்திய அபிவிருத்தி மற்றும் செயற்பாடுகளை கையாளும் (Spectrum Phamatech Lanka Pvt. Ltd.) அமைப்பின் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை