தென்னிலங்கையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி!!
கொழும்பு – கட்டுநாயக்க காவல்துறை பிரிவில் ஆண்டி அம்பலம ராகுல மாவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் இருவர் நீர்கொழும்பு மணிக்கூட்டு கோபுரம் அருகில் வீதியில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவருடைய தங்கச் சங்கிலியை அபகரித்துச் சென்றுள்ளனர்.
இதனை அடுத்து நீர்கொழும்பு போக்குவரத்து காவல்துறையினர் மோட்டார் சைக்கிளில் கொள்ளையர்கள் இருவரையும் துரத்திச் சென்றுள்ளனர்.
ஆடி அம்பலம ராகுல மாவத்தை பிரதேசத்தில் வைத்து குறித்த நபர்கள் மீது காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கொள்ளையர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதி ஓரத்தில் முட்டி மோதியுள்ளது
இச்சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். மற்றொருவர் படுகாயம் அடைந்த நிலையில் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கட்டுநாயக்க காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்து நீர்கொழும்பு சோகோ (soco) காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை