மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்த அரசாங்கம் நடவடிக்கை!!

இலங்கையின் பல்கலைக்கழக கட்டமைப்பில் நிலவும் கால தாமதம் தவிர்க்கப்பட்டு மாணவர்கள் குறித்த காலத்திற்குள் கல்வியை நிறைவு செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்த அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கொழும்பு றோயல் கல்லூரியின் மாணவத் தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

வெளிநாட்டுக் கல்வியை விட உள்நாட்டுப் பல்கலைக்கழகத்தின் கல்வி பெறுமதி வாய்ந்தது.

பாடசாலைக் கல்வியை முடித்து உயர்கல்விக்கு தகுதி பெறும் மாணவர்களின்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்த அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், குருநாகல், மட்டக்களப்பு உட்பட பல பிரதேசங்களில் புதிய பல்கலைக்கழகங்கள் விரைவில் திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கல்வித்துறையின் நிலைமைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், கல்வித் துறையின் முன்னேற்றத்திற்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அதிபர் பதிலளித்துள்ளார்.

பல்கலைக்கழகக் கல்வி குறித்து அதிபர் மாணவர்களிடம் கேட்டறிந்ததோடு, வெளிநாட்டு உயர்கல்வியில் பட்டம் பெற எடுக்கும் காலத்திற்கும் உள்நாட்டு பல்கலைக்கழகத்தில் எடுக்கும் காலத்திற்கும் அதிக வித்தியாசம் இருப்பதாக மாணவர்கள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.