அரசாங்கத்திற்கு எதிரான துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கும் செயற்பாட்டை யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தி முன்னெடுப்பு!!

“நாங்கள் ஒன்று சேர்ந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம்” எனும் தலைப்பிலான அரசாங்கத்திற்கு எதிரான துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கும் செயற்பாட்டை யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தி முன்னெடுத்தது.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் காலை 10 மணியளவில் தேசிய மக்கள் சக்தியினரால் இந்த துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர்
க.இளங்குமரன், நல்லூர் தொகுதி அமைப்பாளர் கே.சரவணன் உட்பட தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.