நாளை சூரிய கிரகணம்..! பார்வையிடும் நேரம் அறிவிப்பு!!
இலங்கையின் பல பகுதிகளிலும் நாளைய தினம் (24) சூரிய கிரகணத்தை பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பா, வடக்கு ஆபிரிக்கா, மத்திய கிழக்கு, மற்றும் ஆசியாவின் மேற்கு பகுதிகளிலும் இந்த சூரிய கிரகணத்தை பார்வைிட முடியும் என கூறப்படுகிறது.
சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நேர் கோட்டில் வரும் போது சூரிய கிரகணம் என கூறப்படுகிறது.
அந்த வகையில் நாளைய தினம் சூரிய கிரகணத்தை இலங்கையில் யாழ்ப்பாணத்திலிருந்து பார்வையிட முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின் பணிப்பாளர், பேராசிரியர் சந்தன ஜயரத்ன குறிப்பிட்டார்.
பார்வையிடும் நேரம்
மாலை 5.27 முதல் 5.46 வரை யாழ்ப்பாணத்தில் சூரிய கிரகணத்தை பார்வையிட முடியும் என அவர் தெரிவித்தார்.
அனுராதபுரம் முதல் யாழ்ப்பாணம் வரையான இலங்கையின் வடபகுதியில் சூரிய கிரகணத்தை பார்வையிட முடியும் என்பதுடன் கொழும்பிலுள்ள மக்களும் 5.43 முதல் 5.49 வரை பார்வையிட முடியும் என அவர் கூறினார்.
எனினும் இலங்கையின் தென்மாகாணத்திலுள்ள மக்கள் சூரிய கிரகணத்தை பார்வையிட முடியாது என அவர் சுட்டிக்காட்டினார்.
சுமார் 22 செக்கன்கள்
இதனை சுமார் 22 செக்கன்கள் வெற்றுக் கண்களால் பார்வையிட முடியும் எனவும் கண்களுக்கு பாதிப்பு ஏற்படாது எனவும் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்தார்.
மேலும் எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி மீண்டும் இலங்கை மக்கள் சூரிய கிரகணத்தை பார்வையிட முடியும் என அவர் கூறினார்.
கருத்துக்களேதுமில்லை